திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்

திண்டுக்கல் மாவட்ட மைய ஊடகப்பிரிவு email id:pktnasdindigul@gmail.com

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், திண்டுக்கல்

Friday, January 19, 2024

மாநில செயற்குழு கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திரு.அ.சிவகுமார் அவர்கள் உரை

மாவட்ட செயலாளர் அவர்களின் உரையிலிருந்து.....
1. நம் அலுவலக பணியாளர்களுக்கு துணை இயக்குனராக பதவி உயர்வு பெறுவதற்கான தீர்ப்பானை பெறப்பட்டும் இது நாள் வரை செயலாக்கம் அளிக்காத இயக்ககத்தை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,


2. இளநிலை உதவியாளர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம் I ல் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு அனுமதிக்கப்படாத பணியாளர்களின் விவரங்களை இதுவரை இயக்கத்திற்கு பலமுறை அனுப்பியும் அதில் உரிய விவரங்கள் அளிக்கப்படாமல் முன் ஊதிய உயர்வு அளிக்கவில்லை என இயக்ககத்தால் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் அது குறித்து நமது பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக நிதிதுறையின் ஒத்திசைவு பெற்று நிலுவைத் தொகை பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது

3. பணியிறக்கம் செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் பணியிடத்திலிருந்து ஆய்வக உதவியாளர்களாக பணியிறக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்து வழங்கப்பட்ட நிலுவைத் தொகையை பிடித்தம் செய்யக்கோரி சார்ந்த முதன்மை கல்வி அலுவலகம் மூலம் ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. 
                                                           இதை முற்றிலும் தடுத்து இளநிலை உதவியாளருக்கான பணிபுரிந்தமைக்கான பண பலன்களை மீள செலுத்துவது ஏற்புடையதாக ஆகாது எனவே மாநில மையம் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு பணியிறக்கம் செய்யப்பட்ட ஆய்வக உதவியாளர்கள் தங்கள் இளநிலை உதவியாளர் காலத்தில் பெற்ற ஊதியத்தை மீள செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

4. சார்நிலை பணியின் அடிப்படை விதியின்படி உதவியாளர் நியமனம் மேற்கொள்ளாமல் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலமாக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவதை இந்த முறை முற்றிலும் தடுத்து நிறுத்திட வேண்டும் என மாநில மையத்தை திண்டுக்கல் மாவட்ட மையத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம் ,மேலும் பதவி உயர்வு என்பது மூன்றில் இரண்டு பங்கும் நேரடி நியமனம் மூன்றில் ஒரு பங்கும் இருக்க வேண்டும் என்ற அடிப்படை விதியை இதுவரை பின்பற்றாத நிர்வாகத்திற்கு உடனடியாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் இதில் நீதிமன்றம் சென்று நிவாரணம் பெறுவதற்காக திண்டுக்கல் மாவட்ட மையத்தின் சார்பாக நீதிமன்ற வழக்கு தொடுப்பதற்கு உரிய அனுமதியை மாநில மையம் அளிக்க வேண்டுமாய் மாவட்டத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது

5. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கல்வி அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் தளவாடப் பொருள்கள் போதுமான அளவில் இல்லை.எனவே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு புதிய தளவாடப் பொருள்கள் வாங்குவதற்கும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள திண்டுக்கல் மாவட்ட மையத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது

6. பதவி உயர்வு ஆணைகள் முற்றிலும் பணியாளர்களுக்கான நேரடி கலந்தாய்வு மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் இதனை மாநில மையம் உறுதி செய்ய வேண்டும்.

7. பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான வேலை நேரம் மீண்டும் 10:00 மணி முதல் மாலை 5. 45 வரை என மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது

8. அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அடிப்படை பணியாளர்களின் எண்ணிக்கையை மறுசீரமைத்து கூடுதல் எண்ணிக்கையில் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டுமாய் அரசை கேட்டுக் கொள்ள வேண்டுமென மாநில மையத்தை திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்

9. அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளில் நீதிமன்ற நடைமுறை சரிவர பின்பற்றப்படாத நிலையில் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் இதர பணியாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது நீதிமன்ற நடைமுறையை முழுவதும் அலுவலகப் பணியாளர்கள் அறிந்து பின்பற்றுவது இயலாத நிலையில் மாவட்டம் தோறும் ஒரு சட்ட ஆலோசகரை அல்லது சட்ட அலுவலர நியமிக்க வேண்டும் என அரசை வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம் மேலும் மேல்முறையீடு சார்ந்த வழக்குகள் பெரும்பாலும் நிதி ஒதுக்கீடு இல்லாத நிலையில்தான் மேல்முறையீடு செய்ய இயலாநிலை உள்ளதால் நீதிமன்ற நடைமுறைகளுக்கான தனியாக செலவினங்களை ஒதுக்கிட வேண்டுமாய் அரசை கேட்டுக் கொள்ள மாநில மையத்தை வலியுறுத்துகின்றோம்

10. அடிப்படை பணியாளர்களுக்கான நியமன அலுவலராக மாவட்ட கல்வி அலுவலர்களையே மீண்டும் தொடரச் செய்து கல்வி மாவட்ட அளவில் பணிமூப்பு நிர்ணயம் செய்யப்பட்டால் அடிப்படை பணியாளர்கள் விரைந்து பதவி உயர்வு பெறவும் பணப்பலன்கள் பெறவும் ஏதுவாய் அமையும் எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மாநில மையம் மேற்கொள்ள வேண்டும்
என வலியுறுத்தி பேசினார்

No comments:

Post a Comment