இன்று 19-03-2022 சனிக்கிழமை சேலத்தில் CSI ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் நமது திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக எடுத்துரைக்கப்பட்ட விஷயங்கள் பின்வருமாறு
1 .கல்வி மாவட்ட வாரியான அடிப்படை பணியாளர்களுக்கான பதவி உயர்வை உறுதி செய்தல் வேண்டும்.
2. அலுவலகப் பணியாளர்கள் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு குறித்த நடைமுறைகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
3.உதவியாளர் நேரடி நியமனத்தை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
4. 2 % ஆசிரியர் பதவி உயர்வு வழங்குதல் முறைப்படி சரியான முன்னுரிமைப் படி இனிவரும் காலங்களில் தொடர்ச்சியான பதவி உயர்வு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
5. தற்போதைய IFHRMS உள்ள சம்பள பட்டியல் தயாரிப்பது உள்ள பிரச்சினைகள் பற்றி கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
6 . திண்டுக்கல் மாவட்டத்தை அதிகாரிகளின் ஒப்புதல் பெறுவதற்கு கோப்புகள் தாமதம் ஆவதால் அந்த பணியாளர்களுக்கு கூடுதல் சுமையாக இருப்பதால் அது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
7. ஆய்வக உதவியாளர் பணியில் இருந்து இளநிலை உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களை தகுதி காண் பருவம் முடியாமைக்கு மாநில மையத்தின் நிலை குறித்து விளக்க வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

No comments:
Post a Comment