திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்

திண்டுக்கல் மாவட்ட மைய ஊடகப்பிரிவு email id:pktnasdindigul@gmail.com

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், திண்டுக்கல்

Tuesday, December 6, 2022

இரண்டு மாதங்களுக்கு ஊதியம் வழங்காத பள்ளிக் கல்வித் துறையை கண்டித்தும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பாக      05- 12- 2022 திங்கள் கிழமை அன்று மாலை 5:45 மணி அளவில் திண்டுக்கல் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகத்தில் அரசாணை 151 ன்படி மறுசீரமைக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு அக்டோபர் 2022 மற்றும் நவம்பர் 2022 ஆகிய இரண்டு மாதங்களுக்கு ஊதியம் வழங்காத பள்ளிக் கல்வித் துறையை கண்டித்தும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

                                                                              ஆர்ப்பாட்டத்தை பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு.பா. மணிவண்ணன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார் ,இந்த ஆர்பாட்டத்திற்கு பள்ளிக்கல்வித் துறை நிர்வாக சங்கத்தின் மூத்த உறுப்பினரும் மாநில துணைத்தலைவருமான திரு. கி .மனோகரன் அவர்கள் முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர்  திரு. அ. சிவக்குமார் அவர்கள் வரவேற்றார்இரண்டு மாத ஊதியம் கோரி கோசங்கள் எழுப்பப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி தோழமை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.

          பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் வாழ்த்துரை வழங்கினார்.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் அவர்கள் ஆர்பாட்டம் வெற்றி பெற வாழ்த்தியதோடு என்றும் அலுவலகப் பணியாளர்களுக்காக இணைந்து போராடுவோம் என்ற உறுதியை அளித்தார்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் திருமதி கிருஷ்ணவேணி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.                                                                                                                                                                                                                                                                   பின்னர் நமது பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் ஆர்ப்பாட்ட தலைமை உரையாய் தலைமை உரையை பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு பா மணிவண்ணன் நிகழ்த்தினார்.                                                 

ஆர்ப்பாட்டத்தில் அலுவலகப் பணியாளர்கள்  படும்இன்னல்கள் குறித்தும் அரசு ஊதியம் வழங்காத குறித்தும் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.எல்.எஸ்.சர்ச்சில் சின்னையா அவர்களும் பழனி கல்வி மாவட்ட தலைவர் திரு.சு.பழனிகுமார் அவர்களும் உரையாற்றினர் தமிழக பின்னர் தமிழக அரசை  வலியுறுத்தி ஆர்ப்பரிக்கும் கோஷங்கள் எழுப்பப்பட்டன இவ்விழாவில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பங்கெடுத்த தோழமை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கும் பள்ளிகல்வித் துறை நிர்வாக சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் மாவட்ட இணை செயலாளர் திரு.பெ. சரவணகுமார் அவர்கள் நன்றி தெரிவித்தார், இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் இனிதே நிறைவுற்றது

                                                                              ஆர்ப்பாட்டம் நிறைவுற்ற பின்னர் அனைத்து பணியாளர்களும் பள்ளி கலை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு பா மணிவண்ணன் அவர்கள் தலைமையில் திரளாக முதன்மை கல்வி அலுவலர் அவர்களைசந்தித்து நமது கோரிக்கை அடங்கிய  மனு அளிக்கப்பட்டது






















No comments:

Post a Comment