திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்

திண்டுக்கல் மாவட்ட மைய ஊடகப்பிரிவு email id:pktnasdindigul@gmail.com

பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், திண்டுக்கல்

Tuesday, January 11, 2022

கல்வித் துறை இயக்குநர்களுடன் மாநிலமைய நிர்வாகிகள் சந்திப்பு

பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள்  சந்திப்பு பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில மைய நிர்வாகிகள் இன்று(11-01-2022) தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.அறிவொளி அவர்கள்,  மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர். திரு. கருப்பசாமி அவர்கள்  தமிழ்நாடு பாடநூல் கழகம் இயக்குனர் திரு. கண்ணப்பன் அவர்கள் தேர்வுத்துறை இயக்குனர். திரு. சேதுராம் வர்மா அவர்கள் சர்வ சிக்ஷா அபியான் திட்ட இயக்குனர்கள் திரு. ராமேஸ்வர முருகன் அவர்கள் மற்றும் திரு.நாகராஜ முருகன் அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களையும் பொங்கல் தின நல்வாழ்த்துக்களையும்  நமது சங்கம் சார்பாக தெரிவித்தனர்.


இந்த நிகழ்வின் போது மேனாள் தலைவர் திரு.த.ல. ஸ்ரீனிவாசன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
 இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர் திரு ஹரிபாஸ்கர், இணை செயலாளர்கள் கோயம்புத்தூர்  திரு. அருண்குமார் கிருஷ்ணகிரி திரு. காமராஜ் ,நீலகிரி திரு .சிவகுமார் தொடக்கக் கல்வி இயக்கக திருமதி சாந்தி விழுப்புரம் - திண்டிவனம் ராமமூர்த்தி உடன் சென்னை மாவட்ட தலைவர் திரு ஆர் யோகராஜ், திரு சபரிநாதன் மற்றும் பள்ளிக்கல்வி இயக்கக பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment